அதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!!
18 January 2021, 9:06 pmசென்னை : அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆவிளிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அந்த பதவி கலைக்கப்பட்டதாகவும், அந்த பதவி உட்பட எந்த ஒரு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கட்சி நடத்தப்பட்டு வருவதாகவும், இது சட்டப்படி தவறு என்றும், புதிய பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதுவரை அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அதிமுக மீது வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரம் இல்லை என மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
0
0