மாநாடு படத்தின் போது கைதட்டி விசில் அடித்ததில் தகராறு: திரையரங்கில் ரசிகர்களுக்கு இடையே மோதல்: கோவையில் பரபரப்பு

Author: Udhayakumar Raman
29 November 2021, 9:54 pm
Quick Share

கோவை:கோவையில் மாநாடு வெளியான தியேட்டரில் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதேபோல் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தியேட்டரில் மாநாடு படம் திரையிடப்பட்டுள்ளது.நேற்று இரவு காட்சியின் போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது படம் ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் கைதட்டியும் விசிலடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் எதற்கு இப்படி கூச்சல் போடுகிறீர்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? என கேட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் வெளியே ஓடிவந்தனர்.இந்த தாக்குதலில் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த முகமது நிஷார் (20) உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த கவுதம் (20 ) ஆகியோர் காயமடைந்தனர்.உடனடியாக ரேஸ்கோர்ஸ்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை பிடித்து போலீசார் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 169

0

0