கட்சி மீது அதிருப்தி.! கூண்டோடு அதிமுகவுக்கு தாவிய திமுகவினர்!!

5 August 2020, 1:02 pm
Dmk Joins Admk - Updatenews360
Quick Share

கோவை : அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ் தலைமையில் திமுகவினர் 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த சில நாட்களாக திமுகவின் மீது பல்வேறு குற்றசம்பவங்களும், பல்வேறு குற்றசாட்டுகளும் எழுந்து வருகின்றன. இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை கூறி, சமூக வலைதளங்களில் இந்து கடவுளுக்கு அவமதிப்பு ஏற்படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என அனைருவம் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அறிவாலயத்தில் இருந்து எந்த கண்டனமோ, அறிக்கையோ வெளியாகவில்லை. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மீது பொதுமக்கள் மட்டுமல்லாமல், திமுகவினருக்கே அதிருப்தி ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக சமீபத்தில் திமுக முக்கிய புள்ளிகள் திமுகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சியை தேடி சென்றுவருகின்றனர். தலைகளே தாவும்போது வால்களுக்கு அங்கு என்ன வேலை என்பது போல, தற்போது தமிழகம் முழுவதும் திமுக மீது அதிருப்தி கொண்ட தொண்டர்கள் மாற்று கட்சிக்கு மாறி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மேட்டுப்பாளையம் LS புரத்தைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவின் நகர முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி நாகராஜ் தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓகே சின்னராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் உடனிருந்தனர்.

Views: - 2

0

0