கோவை : பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று துவக்கி வைத்தார்.
கோவை காந்திபார்க்,பொன்னையராஜபுரம் பகுதியில் பாஜக சார்பில் நமோ பொங்கல் விழா பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இன்றைய தினம் ஆர்.எஸ்.புரம் மண்டலத்தில் 208 பெண்கள் பொங்கல் வைத்துள்ளனர் என்றும் இதில் இளம் பெண்கள் பலர் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தை காட்டிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் போது அம்மாநில அரசு கட்டுபாடுகளை விதித்து ஆலயங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் முக்கிய திருவிழாவான தைப்பூச தினமன்று கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது.
மக்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த அரசு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே கட்டுபாடுகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலை திறக்க வேண்டுமென தெரிவித்தார். அரசு வழங்கிய பொங்கல் பரிசில் சில இடங்களில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தும் தெரிந்தே அது விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணமான அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் எப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனக் கேள்வி எழுப்பிய அவர் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது கேளி கூத்தாகிவிடுமென தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நேரடியாக மத்திய அரசு எடுத்து கொள்ளும் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வழக்கமாக மாநில அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசிற்கு செல்ல அனுமதி வழங்காததால் மத்திய அரசு தாமாகவே இதனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் இதனை அரசு அலுவலர்கள் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாணவி தற்கொலையில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென வானதி சீனிவாசன் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த மாணவியின் தற்கொலை தூண்டப்பட்ட தற்கொலை என தெரிகிறது.
இதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அம்மாவட்ட எஸ்.பி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளதெனவும் இப்படி இருந்தால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என கேள்வி எழுப்பினார். எனவே காவல்துறை அந்த மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்தவரை விட்டு விட்டு அதில் உள்ள உண்மையை ஆராய வேண்டுமென கேட்டுகொண்டார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.