மகளுடன் பரதநாட்டியம் ஆடிய மாவட்ட வருவாய் அலுவலர்… ஊட்டி கோடை விழா நிகழ்ச்சியில் கவனம்பெற்ற நடனம்…!!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 2:15 pm
Quick Share

ஊட்டி கோடை விழா நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடி மாவட்ட வருவாய் அலுவலர் அசத்தினார்.

நீலகிரியில் நடப்பாண்டு கோடை விழா மே 6ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

நேற்று மாலை குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய குழுவினருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி நடனமாடினர்.

பின், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகள் சம்ருதி வர்ணமாலிகா இணைந்து மற்றொரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 834

0

0