தலைவிரித்தாடும் கொரோனா : மாவட்ட வாரியான விபரம்..!
12 August 2020, 6:40 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 439 பேருக்கும், திருவள்ளூரில் 407 பேருக்கும், காஞ்சிபுரம் 371 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 294 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!