பிரிந்த ஜோடி மீண்டும் இணைகிறது? தனுஷ் – ஐஸ்வர்யா குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட கஸ்தூரி ராஜா!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2022, 6:51 pm
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தனர். இது சினிமாத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்துக்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சமுகவலைதளங்களில் இருவரும் சேர வேண்டும் என தனுஷ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே பிரிந்துள்ளனர்.
இது வெறும் குடும்ப சண்டைதான், விவாகரத்து இல்ல என கூறிய அவர், தனுஷம் ஐஸ்வர்யாவும் தற்போது ஐதராபாத்தில் உள்ளதாகவும் இருவரிடமும் போனில் தொடர்பு கொண்டு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு பக்கம் விவகாரத்து செய்யப்போவதாக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ள நிலையில், தனுஷின் தந்தையும் ஐஸ்வர்யாவின் முன்னாள் மாமனாருமான கஸ்தூரி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி சமூக வலைதளங்களில் பல கருத்துகள் உலவி வரும் நிலையில், இருவருக்குமிடையே சமாதானம் பேசி வருவதாக கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
1
1