யூடியூப்பில் ஆபாச பேச்சு.. டிக்டாக் திவ்யா கைது: நாகூரில் பதுங்கியிருந்தவரை லாக் செய்த போலீஸ்!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 6:58 pm
Quick Share

நாகப்பட்டினம்: டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்த திவ்யா நாகூரில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் செயலி மூலம் இவர், காணொலி வெளியிட்டு பிரபலம் ஆனார். சமீபத்தில் தன்னை காதலித்து ஏமாற்றிச் சென்ற கார்த்திக் என்பவரைத் தேடிச் சென்றபடி திவ்யா வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகின.

கொரோனா காலத்தில் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் காணொலி ஒன்றை வெளியிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏராளமான திருநங்கைகள் திவ்யாவை காலில் விழவைத்து அதனைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மற்றொரு டிக் டாக் பிரபலமான தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருடன் திவ்யாவுக்கு காணொலி வெளியிடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் தாக்கி, காணொலி வெளியிட்டு வந்தனர். சுகந்தி குறித்து டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பி காணொலி வெளியிட்டார்.

இது தொடர்பாக டிக் டாக் சுகந்தி கடந்த மாதம் 14ம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நாகலாபுரம் பகுதியில் உள்ள எனது வீட்டில் நான், எனது அக்கா நாகஜோதி, எனது தந்தை ராஜு, எனது 16 வயது மகள் ஆகியோர் பாலியல் தொழில் நடத்தி வருவதாக யூ-ட்யூபில் டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பிவருகிறார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். காவல் துறையினர் டிக்டாக் திவ்யாவைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதியில் திவ்யா தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து தேனிக்கு அழைத்துவந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திவ்யாவை கைதுசெய்து, நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Views: - 190

0

0