கொரோனா பாதிப்பில் மட்டுமல்ல இதுலையும் நாங்கதான் FIRST : டாஸ்மாக்கில் மது விற்பனையான நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 11:41 am
Tasmac- Updatenews360
Quick Share

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக்கில் ரூ. 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையில் உள்ள பார்கள் பல மாதங்களுக்கு பின்னர் சில தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3-ம் தேதி ரூ 205.61 கோடிக்கும், 4-ம் தேதி ரூ 225.42 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனையாகியதாக தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலம் – ரூ 79.84, கோவை மண்டலம் 74.46, மதுரை மண்டலம் – ரூ51.68 கோடி, திருச்சி மண்டலம் – ரூ47.57, சேலம் மண்டலம் – ரூ46.62 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த தீபாவளிக்கு ரூ 467.69 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்தாண்டு ரூ 431.03 கோடிக்கு மதுவிற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 343

0

0