விதிகளை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்குப்பதிவு : சென்னையில் போலீசார் நடவடிக்கை..!!

14 November 2020, 3:45 pm
diwali celebration - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தீபாவளிப் பண்டிகை களைகட்டி வருகிறது. புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே, தீபாவளியைப் பண்டிகையை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என தமிழக அரசு மற்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காற்று மாசுபாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக சென்னையில் 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாங்காடு உள்ளிட்ட அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Views: - 32

0

0

1 thought on “விதிகளை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்குப்பதிவு : சென்னையில் போலீசார் நடவடிக்கை..!!

Comments are closed.