நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
29 November 2021, 7:22 pm
Quick Share

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்த கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமா? என்ற எழுந்துள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட நிலையில் தற்போது தேமுதிகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1-ம் தேதி முதல் 7-ம்தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகியாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Views: - 164

0

0