“ப்ளீஸ்.. யாரும் போகாதீங்க“ : அதிமுகவில் இணைந்த தேமுதிகவினரிடம் கெஞ்சிய தேமுதிக நிர்வாகி!!

12 July 2021, 6:47 pm
DMDK Executive Plaesed - Updatenews360
Quick Share

திருப்பூர் : தேமுதிகவில் இருந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்ற போது மீண்டும் தேமுதிகவுக்கே வாருங்கள் என தேமுதிக நிர்வாகி அழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் குமார் நகர் பகுதியில் மாற்று கட்சியில் இருந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய வந்திருந்தனர்.

இதனை அறிந்த தேமுதிக வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன் என்பவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை மீண்டும் அழைத்தார்.

இதனால் அதிமுகவினருக்கும் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் அவரை நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வெளியே அனுப்பினர். நீண்ட நேரம் நின்று பார்த்தும் மீண்டும் தேமுதிகவிற்கு வர அனைவரும் மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Views: - 310

0

0