விஜயகாந்த பிறந்தநாள் விழா : பேனர் வைப்பதில் தகராறு!!

18 August 2020, 3:25 pm
Madurai Banner Issue - Updatenews360
Quick Share

மதுரை : விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிற்காக இளைஞர் அணி சார்பில் பேனர் வைக்க அதிமுகவினர் எதிர்ப்பு, பேனர் அகற்றப்பட்டதால் சுப்ரமணியபுரம் காவல் நிலையம் முற்றுகையிட்டு வாக்குவாதம்.

தேமுதிக பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிற்காக பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் நேற்று பேனர் வைத்ததுற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் அந்த இடத்தில் பேனர் வைக்க வேண்டும் என்று C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனார்.

புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுத்துக்குமார் தலைமையில்
50 க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்ற நிலையில் இரவில் பேனரை அகற்றியதால் C2 சுப்பரமணியபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்பனர்.

காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக தெரிவித்தனர். இங்கு பேனர் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து தேமுதிக வினர் கலைந்து சென்றனர்.

பின்பு செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் கூறியதாவது : அதிமுகவினர் பேனர் வைத்ததை மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அதிமுக கூட்டணியில் இனக்கமாக சூழ்நிலையில் உள்ளோம்.

ஆனால் எங்களுடைய தலைவர் பேனரை வைக்க விட கூடாது என்று மனநிலையில் உள்ளனர் அதிமுகவினர். இதே இடத்தில் 10 நாள் பேனர் வைத்தனர், மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வில்லை. நாங்கள் வைத்த பேனரை ஒரே நாளில் அகற்றுகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

Views: - 31

0

0