கூட்டணியால் தேமுதிகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை…! பிரேமலதா விஜயகாந்த் வேதனை

8 August 2020, 12:29 pm
வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தேர்தலின் போது முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே தண்ணீா் பந்தலை, பிரேமலதா திறந்துவைத்தார்; இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. எனவே, இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம், நாம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தல், தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழும். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தரக் கூடிய அரசியலாக 2021 சட்டப்பேரவை தோ்தல் அமையும். இதுவரை, தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. 2021 தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது, தோ்தல் நேரத்தில் கட்சித்தலைவா் விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பாா். அவரது முடிவு தமிழக மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
Quick Share

சென்னை: கூட்டணியால் தேமுதிகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது தேமுதிகவானது, திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அக்கட்சி இறங்கு முகத்தை சந்தித்தது.

அக்கட்சியின் எம்எல்ஏக்கள் விஜயகாந்தின் நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்து அதிமுகவுக்கு தாவினார்கள். கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் அக்கட்சி பெரிதாக சோபிக்கவில்லை. பெரிய அரசியல் நடவடிக்கைகள் முன் எடுக்கப்படாததால் தேமுதிக தொண்டர்கள் சோர்ந்து போய் உள்ளனர்.

இந் நிலையில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேமுதிக நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக ஆற்றி வரும் நலப்பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

அடுத்து வரக்கூடிய தேர்தலில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக எம்எல்ஏக்கள் தேமுதிக சார்பில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை துவங்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைக்கிறோம். இதுபோன்று கூட்டணி வைத்து, வைத்து மற்ற கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. அதனால் தேமுதிகவுக்கோ, அதன் தொண்டர்களுக்கோ எந்த பலனும் கிடைப்பதில்லை.

எனவே தற்போதைய தேர்தலில் கூட்டணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். வரக்கூடிய தேர்தலில் தேமுதிக வெற்றி பெற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு யோசனைகள் சொல்லுங்கள்.

வெகு விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்குவார். கொரோனா காலம் முடிந்த பின்னால் நேரில் ஆலோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 24

0

0