தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் அரியாசனத்தில் அமரும் : பிரேமலதா விஜயகாந்த் ஆருடம்.!!

6 November 2020, 6:55 pm
premalatha vijayakanth - updatenews360
Quick Share

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு ஆயத்தமாகும் விதமாக, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, 3வது அணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சில கட்சிகள் ரகசியமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும். திமுக கூட்டணியிலும் முரண்பாடுகள், கருத்து மோதல்களும் இருந்துதான் வருகிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும். அதிமுக ஆட்சியை நிறையும், குறையும் கொண்ட ஆட்சியாக பார்க்கிறோம்,’’ என தெரிவித்துள்ளார்.

Views: - 34

0

0

1 thought on “தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் அரியாசனத்தில் அமரும் : பிரேமலதா விஜயகாந்த் ஆருடம்.!!

Comments are closed.