‘கூல்’ கேப்டன் தோனி பற்றி நம்ம கேப்டன் விஜயகாந்த் ‘சொன்ன’ வார்த்தை…! இணையத்தில் வைரல்

16 August 2020, 9:43 pm
vijayakanth-updatenews360
Quick Share

சென்னை: கூல் கேப்டன் தோனிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து இருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூல் கேப்டன் தோனி நேற்று அதிரடியாக அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் வெளியான அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தோனி ரசிகர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். தோனி அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல ரெய்னாவும் ஓய்வை அறிவிக்க ஒட்டு மொத்த ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்.

கூல் தோனியின் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் அவரது நினைவுகளை பகிர்ந்து ஓய்வு காலத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில்,கூல் கேப்டன் தோனிக்கு, தேமுதிக தலைவரும், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.. “Captain Dhoni – A Cool and Great Captain”’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 28

0

0