பேரூராட்சி துணை தலைவர் வீட்டில் பட்டாசு வைத்து திமுகவினர் அராஜகம்.. பெண்கள் குழந்தைகள் காயம்

12 May 2021, 9:38 pm
Quick Share

கோவை: கோவையில் பேரூராட்சி துணை தலைவர் வீட்டில் பட்டாசு வைத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுப்பட்டு வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை மதுக்கரை பேரூராட்சி துணை தலைவராக இருப்பவர் ஜோசப், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக களத்தில் சிறப்பாக செயல்பட்டு இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிருத்துவ, மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை அதிமுகவிற்கு பெற்றுதர சிறப்பாக செயலாற்றியுள்ளார் ஜோசப். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர். காத்திருந்து திமுக வெற்றி பெற்றதும் தொடர்ந்து இப்பகுதியில் அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவத்தன்று காலையில் கோவை மதுக்கரை மேட்டாங்காடு பகுதியில் உள்ள ஜோசப் வீட்டிற்கு திமுகவை சேர்ந்த சிலர் வந்து அவரின் வீட்டு வாசலில் பட்டாசுக்களை வெடித்து பெண்களை அச்சுறுத்தியுள்ளார்கள்.

வீட்டிலிருந்த பெண்கள் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து இப்படியெல்லாம் செய்வது சரியல்ல என்று கேட்டுள்ளார்கள். இதனையடுத்து மாலை 7 மணிக்கு மீண்டும் திமுகவை சேர்ந்த ஆசிக், சியாத், நவாப், சாகுல், மற்றும் சவுக்கத் என்பவர்கள் ஜோசப் வீட்டிற்க்கு வந்து வீட்டின் முன் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் உருவபடத்தை எரித்து சக்திவாய்ந்த பட்டாசுக்களை வெடித்துள்ளார்கள். இதில் அங்கிருந்த பெண்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. பதவியேற்ற முதல்நாளே திமுகவினர் தங்களது கோரமுகத்தை காட்ட துவங்கியுள்ளார்கள். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். இதுபோன்ற அராஜகசெயலை தமிழக அரசு கட்டுப்படுத்துமா? சம்பத்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுப்பார்களா, அல்லது கைகட்டி வேடிக்கைபார்த்து அராஜகத்தை ஊக்குவிக்குமா என்பது தெரியவில்லை.

Views: - 203

1

0