மறைமுகத் தேர்தலை புறக்கணித்த திமுக : கோவையில் ஊராட்சி துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ராதாமணி தேர்வு!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2021, 6:18 pm
கோவை : கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த ராதாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் கோவையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கான துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த தேர்தலில், அதி.மு.க.,வை சேர்ந்த 9 பேர், திமுக.,வை சேர்ந்த 6 பேர், பா.ஜ.க.,வை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 17 பேர் வாக்களிக்க வந்தனர். அப்போது திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து மற்ற உறுப்பினர்களை வைத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ராதாமணி வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், ராதாமணியிடம் வழங்கினார்.
0
0