‘திருப்பூரில் தி.மு.க கொடி கட்டிய காரில் போதைபொருள் கடத்தல்’ : தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகளால் ஸ்டாலின் அதிருப்தி..!

28 August 2020, 4:02 pm
Quick Share

திருப்பூரில் தி.மு.க கொடி கட்டிய காரில் போதை புகையிலையை கடத்திய இருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

நாள் ஒரு செய்தி பொழுதொறு குற்றம் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, போலீசிடம் மாட்டிக்கொள்வதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆள் கடத்தல் முதல் அரசி கடத்தல் வரை, அத்தனைக்கும் அடியாட்கள் திமுகவில் உண்டு. கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவதும், பணத்திற்காக சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதையும் திமுகவினர் தங்கள் கொள்கையில் ஒன்றாக சேர்துவிட்டார்களோ என நினைக்க வைக்கிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு அரசி கடத்திய வழக்கில் திமுக கிளை செயலாளர் வேலு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், திமுகவின் காங்கேயம் நகர பொருளாளர் மகேஷ்குமார் மது பாட்டில்கள் கடத்தி சட்ட விரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதுக்கு ஒரு எண்ட் இல்லையா என யோசிப்பதற்குள் நேற்று மாலை திருப்பூரில் தி.மு.க கொடி கட்டிய காரில் போதை புகையிலையை கடத்திய இருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அங்குள்ள மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம் சோதனைசாவடியில் போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக தி.மு.க. கட்சி கொடியுடன் வந்த TN 39 சி எப் 2074 என்ற எண்ணுடைய காரை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் 52 கிலோ இருந்தது.

இதானால் அதிர்ச்சியடைந்த போலீசார் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்து அதில் வந்த இருவரையும் கைது செய்தனர் விசாரணையில், குள்ளே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார், மற்றும் நாச்சம்மாள் காலனியை சேர்ந்த பீமாராவ் மகன் ஞானப்பிரகாஷ் என்பதும் தெரிந்தது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சுற்று பகுதியில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசாரிடம் மாட்டியது தெரிந்தது.

இதில், சதீஷ்குமார் தந்தை முருகேசன், தி.மு.க’வை சேர்ந்தவர் இதனால் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில், கொண்டு சென்றால், போலீசில் சிக்க மாட்டோம் என்ற எண்ணத்தில் சென்றுள்ளனர். இந்த சட்டவிரோத செயலில் நீண்ட காலமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தார்.