“சொன்ன வார்த்தையை காப்பாத்த தவறிட்டீங்க“ கருணாநிதி பெயரால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்!!
5 February 2021, 1:26 pmபுதுச்சேரியில் கருணாநிதி பெயரை சூட்டுவது போல சூட்டிவிட்டு பின்னர் நீக்கம் செய்ததால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் சாலையை திறந்து வைத்தார்.
அப்போது அங்கு வந்த திமுகவினர், அமைச்சரவையில் புறவழிச்சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவதாக அறிவித்து விட்டு பின்னர் ஏன் பெயரை சூட்டாமல் மேற்கு புறவழிச்சாலை என சூட்டினீர்கள் என கேள்வியை எழுப்பினர்.
காரைக்கால் மாவட்ட திமுகவினர் ஒன்று திரண்டதால் அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முதலமைச்சர் நாராயணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தர்மசங்கடத்துக்கு ஆளான நாராயணசாமி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். மேலும் திறப்பு விழா அழைப்பிதழில் டாக்டர் கலைஞர் புறவழி சாலை என பதிவிடாமல் மேற்கு புறவழிசாலை என பதிவிட்ட்து என சரமாரியாக திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரை அழைத்த நாராயணசாமி, உடனடியாக பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் புறவழிச்சாலை என பதிவிட உத்தரவிட்டார். இதன் பின்னரே திமுகவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
மேலும் இது குறித்து ஸ்டாலினிடம் திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் திமுக – காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே இரு கட்சிகளுக்குள்ளும் புகைச்சல் இருந்த காரணத்தினால்தான் புதுச்சேரி முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட மறுத்துள்ளதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கருணாநிதி பெயரை சூட்டுவதாக கூறிவிட்டு அவர் பெயரை பதிவிடாமல் இருந்தததை தற்போது திமுகவினர் கேட்டு வாங்கியுள்ளது ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மீது அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0
0