காங்கிரஸ் போட்ட “குண்டு“ : திமுகவுடன் விரிசல்?

13 September 2020, 10:24 am
DMK - Congress - Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதனால் தேர்தலில் களமிறங்க தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். எதிர்வரும் தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி மீண்டும் தொடருமான என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில் தமிகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனத்திற்கு பின் நிறைய காரணங்கள் எழுப்பப்பட்டாலும், ராகுல் காந்தியின் நம்பிக்கை பாத்திரமாக விளங்கியவர், அரசியல் பலம் வாய்ந்தவர், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பளாராக இருந்தவர் தினேஷ் குண்டுராவ்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள காங்கிரஸ் படு தீவிரமாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் இத்தனை இடங்கள் வேண்டும் என கேட்டதை தவிர இப்படி ஒரு பதவியை கேட்டதில்லை. எப்படியும் இந்த பதவியை கட்சி மேலிடத் தலைவர்களின் அனுமதியின்றி கேட்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது, மாநில பதவிகள் கிடைக்காமல் கனிமொழி ஒரு பக்கம், உதயநிதி ஒரு பக்கம் அப்செட் ஆகி வரும் நிலையில், திமுக அடுத்த தலைவலியாக துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கோரியுள்ளது.

கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியாமல் இருக்கும் ஸ்டாலின், கூட்டணியில் இருக்கும் காங்கிரசின் கோரிக்கைக்கு பதில் சொல்வாரா அல்லது கூட்டணியில் இருந்து காங்கிரசை கழட்விடுவாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும் என கூறுகின்றனர்.

Views: - 0

0

0