இந்த தேர்தலோடு திமுக-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி : பொன்.ராதாகிருஷ்ணன் ஓபன் டாக்!!

23 January 2021, 9:59 am
Pon Radha - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திமுகவின் சரித்திரம் இந்த தேர்தலோடு முடிவுரை எழுதப்படும் ,தமிழகத்தில் இரட்டை காளைகள் வெளியேறும் நேரம் வந்து விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்கான பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்தது இந்திரா காந்தி என்றும் சோனியா காந்தி அவரை பார்த்து கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் தேசபக்தி,நெஞ்சுருதியை நாட்டிற்கு ஆதரவாக கருத்துக்கு கூறுவதாக இருந்தாலும் சரிதான், செயல்படுவதாக இருந்தாலும் சரி தான் அவருக்கு நிகர் யாரும் இல்லை என கூறினார்.

திமுக ஒரு காலத்தில் அடைந்தால் திராவிட நாடு என்றார்கள், அது இதுவரை அடைய முடிய வில்லை, இன்று விடிந்தால் அடையும் என்கிறார்கள். எப்படி அன்று திராவிட நாடு அடைய வில்லையோ அது போல் திமுகவுக்கு விடியலே இல்லை எனவும் திமுகவின் சரித்திரம் இந்த தேர்தலோடு முடிவுரை எழுதப்படும் என கூறினார்.

மேலும் தமிழகத்தில் இரட்டை காளைகளான திமுகவும் காங்கிரசும் இந்த தேர்தலோடு வெளியேறும் நேரம் வந்து விட்டது,1969 ல் காமராஜருக்கு என்ன துரோகம் காங்கிரஸ் செய்ததோ அதை இந்த தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 2

0

0