எதுக்கு இந்த அரசியல்? மத்திய அரசுக்கு எதிராக வேண்டுமென்றே திமுக அரசியல் செய்கிறது : அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 10:23 pm
Annamalai Stalin - updatenews360
Quick Share

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான தமிழக அரசின் குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உக்ரைனில் உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மீட்புக்குழு உள்ள நிலையில் தமிழகம் ஒரு தூதுக் குழுவை அனுப்ப என்ன தேவை? பாதுகாப்புத்துறை, வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உக்ரைன் போருடன் நீட் தேர்வை தொடர்புபடுத்தி மாணவர்களின் உயிருடன் விளையாட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 914

0

0