நீதிமன்ற உத்தரவை அவமதித்த திமுகவினர் : அமைச்சர் வருகைக்காக விதிமீறல்.. வேடிக்கை பார்த்த காவல்துறை!!!
Author: Udayachandran RadhaKrishnan1 November 2021, 10:23 pm
கோவை : தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று நீதிமன்ற தீர்பை மதிக்காமல் திமுக.,வினர் பேனர்கள் மற்றும் சரவெடி வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 வது நாளாக “மக்கள் சபை” நிகழ்ச்சி மூலம் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
அதன்படி, 3வது நாளான இன்று, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட, 5 முதல் 9வது வார்டுகளுக்கு பகுதிகளில் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜியை வரவேற்க உயர் நீதிமன்ற ஆணையை மீறி சாலையின் இருபுறமும் கொடி கம்பகள் வைக்கப்பட்டு கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
மேலும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்களின் கார் முன்னே வெடி வைக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அமைச்சர் வருகையையொட்டி சாலையின் இருபுறமும் மறிக்கப்பட்டதால் கவுண்டம்பாளையம்-இடையர்பாளையம் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேடிக்கையான சம்பவம் என்பது குறிப்பிடதக்கது.
1
0