நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு
Author: kavin kumar26 January 2022, 8:20 pm
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Views: - 3157
0
0