நீட் விவகாரத்தில் திமுக DOUBLE ACT.. தரமற்ற பொங்கல் பரிசு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2022, 10:53 am
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றசாட்டினார்.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் விலக்கு அளிப்போம் என கூறிய திமுக தற்போது அதை மறந்து செயல்படுவதாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை ஒருபுறம் நடைபெற்றாலும், மறுபுறம் நீட் தேர்வு பயிற்சி மையங்களை செயல்படுத்தி வந்தோம். ஆனால், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் விமர்சித்தார்.
0
0