திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாக தான் இருக்கும் : பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சனம்..!

By: Babu
14 October 2020, 2:09 pm
L Murugan - Updatenews360
Quick Share

சென்னை : திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாக தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் தனியார் கடை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை அவர்களுக்கு ஹீரோவாக இருந்ததாக திமுக தலைவர் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு, கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த சட்டமன்ற தேர்தலிலும் ஜீரோவாகதான் இருக்கும் என்றார்.

மேலும், அவர் கூறியதாவது :- ஊராட்சிமன்ற பிரதிநிதிகள் திமுகவினரால் அவமானப்படுத்தப்படுவது கண்டனத்துக்குரியது. திமுகவில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர் அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் திமுக இதுவரை எடுக்காதது ஏன்..? மக்களை திசை திருப்பவே அறிக்கை விடுகின்றனர், எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக் கொண்டு விட்டதா..? என்ற கேள்விக்கு, முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்று மீண்டும் மழுப்பலான பதிலை எல்.முருகன் தெரிவித்தார்.

Views: - 45

0

0