அண்ணாமலையா… தெறித்து ஓடும் திமுகவின் அன்பில் மகேஷ்..! விவாதம் நடத்தாமல் நழுவல்…!
19 September 2020, 6:41 pmதமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதோடு, பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அப்படி எழும் வார்த்தைப் போரின் இறுதியில், விவாதம் நடத்துவதற்கு தயாரா..? என்ற கேள்வி எழுப்பி, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றதுண்டு.
இந்த நிலையில், பா.ஜ.க.வில் அண்மையில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையுடன் விவாதம் நடத்தும் விவகாரத்தில் திருச்சி தி.மு.க நிர்வாகி அன்பில் மகேஷ் பொய்யாமொழி நழுவல் பதிலளித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : கடந்த 5 நாட்களில் மட்டும் ஆன்லைன் மூலமாக ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 200 இடங்களிலாவது தி.மு.க. போட்டியிட வேண்டும். ஆனால், அது தொடர்பான முடிவை தலைவர்தான் எடுப்பார். அதேபோல, தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றியும் அவரே தீர்மானிப்பார்.
முதலமைச்சர் வேட்பாளர் முக. ஸ்டாலின்தான் என்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளன. ஏறத்தாழ கூட்டணிகளும் உறுதியாகிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட வேண்டும் என் நான் விரும்புகிறேன,” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலையுடன் விவாதம் நடத்த தயாரா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் ஏன் விட வேண்டும்,” எனக் கூறிவிட்டு, நைசாக நழுவினார்.