மொத்த கன்ட்ரோலும் என் கைக்கு வரனும் : துப்புரவு பணியாளரை தாக்கிய திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

6 May 2021, 11:10 am
dmk case - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் துப்புரவு பணயாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருபவர் லோகநாதன். இவர் வழக்கம் போல பணிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் புகழேந்தி, 82வது வட்டத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திமுக நிர்வாகி புகழேந்தி, துப்புரவு பணியாளரான லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், அவருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி புகழேந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 315

0

0