திமுக பையா கவுண்டர், நந்தா கல்வி நிறுவனங்களில் ஐடி ரெய்டு : கணக்கில் வராத கோடிக்கணக்கான ரொக்கம் பறிமுதல்..!!

29 October 2020, 4:33 pm
IT raid 2- updatenews360
Quick Share

கோவை : திமுக நிர்வாகி பையா கவுண்டர், நந்தா கல்வி நிறுவனங்கள் உள்பட 22 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரி ஏய்ப்பு புகாரில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கோவையைச் சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் எனப்படும் ஆர். கிருஷ்ணனின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதோடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலும் ரெய்டு தொடர்ந்தது.

dmk paiya gounder - updatenews360-Recovered

இந்த நிலையில், நந்தா கல்வி நிறுவனத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.150 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ரொக்கம் எப்படி வந்தது என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர்களின் சேர்க்கையில் அதிக ரொக்கம் கட்டணமாக வசூலித்து, அரசிடம் குறைந்த கட்டணத்தை கணக்கில் காட்டியது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டாத ரொக்கத்தை பிற நிறுவனங்களில முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 224

0

0