பெண் ஊராட்சி உறுப்பினருக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல் : புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்… காவல்நிலையம் முன்பு தர்ணா..!!

Author: Babu Lakshmanan
23 September 2021, 5:45 pm
karur protest - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து காவல்நிலையம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்சேவாப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுகவைச் சேர்ந்த கடவூர் ஒன்றியப்பெருந்தலைவரின் தீவிர ஆதரவாளரும், ஒப்பந்ததாரருமான தமிழ் பொன்னுச்சாமி, அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அரசுப் பணிக்கான பூமி பூஜையினை நிகழ்த்த முற்பட்டுள்ளார்.

இதனை அந்த பகுதி பெண் ஊராட்சி உறுப்பினர் சசிகலா மற்றும் அவரது கணவர் அருள்முருகன் தடுத்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் இரவு நேரத்தில் தமிழ்பொன்னுசாமி மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுத்து ஆகிய இருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பெண் என்றும் பாராமல். வீடு புகுந்து கொலைமிரட்டல் நிகழ்த்தி கடுமையான சொற்களை கையாண்டு பேசியுள்ளனர்.

இந்த சம்பவம் பல்வேறு சமூக வளைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இவர்கள் மீது பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர் சசிகலாவின் உறவினர்கள் இன்று பாலவிடுதி காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு திடீரென்று முற்றுகையிட்டனர்.

அப்போது, போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால், அதனை ஏற்காத அருள் முருகன், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே, அங்கிருந்து செல்வேன் எனப் பிடிவாதமாக தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 254

0

0