“முதலுக்கே மோசம் பண்ணாதீங்கடா“ : திமுக நிர்வாகி வைத்த பரிந்துரையால் முகம் வேர்த்த டி.ஆர் பாலு!!

13 November 2020, 3:44 pm
TR Baalu - Updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தேர்தல் தயாரிப்பு குழுவினர் டி ஆர் பாலு தலைமையில் ஊர் ஊராக சென்று கருத்து கேட்டு கொண்டிருக்கிறார்கள். இதனிடையே திருப்பூர் திமுக நிர்வாகிகளுடன் டிஆர் பாலு தலைமையிலான குழு கருத்து கேட்பு கூட்டத்தில் ஈடுபட்டன.

அந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகளை மூடல் குறித்த எந்த அறிக்கையும் விட வேண்டாம் என்றும், கடந்த தேர்தலில் திமுக தோற்க அதுவும் ஒரு காரணம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து மூத்த நிர்வாகி ஒருவர், திமுக ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் பரவாயில்லை, கட்டாயம் மதுக்கடை அடைப்பை அறிக்கையில் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

இதைக் கேட்ட டிஆர் பாலு ஷாக் ஆகி உள்ளார். திமுகவினரில் முக்கிய பிரமுகர்கள் சிலர் மதுபான ஆலைகளை வைத்துள்ளதால், மதுபானக் கடைகளை மூடுவது குறித்த அறிக்கை வெளியிடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் டிஆர் பாலுவும் மது தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். ஒரு வேளை நிர்வாகி கூறியதும் டிஆர் பாலு முகம் மாற இதுவும் காரணமாக இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே…. திமுகவின் அறிக்கையை..

Views: - 22

0

0