உட்கட்சிப் பூசல் காரணமாக திமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து..!

Author: Udhayakumar Raman
18 October 2021, 10:53 pm
Quick Share

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் திமுக கட்சியினரிடையே உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சி நிர்வாகி ஒருவருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தி.மு.க.,வை சேர்ந்த சன் ரைஸ் சுரேஸ் மற்றும் கேபிள் மணி ஆகிய இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளாது.இதன் காரணமாக நேற்று இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது. கேபிள் மணி என்பவர் சுரேசை தாக்கியுள்ளார். இதனையடுத்து நேற்று செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில், இன்று மாலை அங்குள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் நண்பர்களுடன் கேபிள் மணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் கேபிள் மணியை கத்தியால் நெஞ்சில் குத்தி கிழித்தும், கையில் கத்தியால் கீறியும் சென்றனர். படுகாயம் அடைந்த கேபிள் மணியை அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் வழக்குப்பதிந்த போலீசார், அங்கு உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 225

0

0