உள்ளாட்சி இடைத்தேர்தல்: அன்னூர் மாவட்ட கவுன்சிலராக திமுக நிர்வாகி வெற்றி..!

Author: kavin kumar
12 October 2021, 9:58 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) தேர்தலில் திமுக நிர்வாகி வெற்றி பெற்றுள்ளார்.

கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 13 பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55,280 பேர் வாக்களித்துள்ளனர்.இந்த தேர்தலில் உள்ள 13 பதவிகளில் 11 பதவிகளை திமுக பெற்றது. அதன்படி, கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) தேர்தலில் திமுக நிர்வாகி வெற்றி பெற்றுள்ளார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 42ஆயிரத்து 67பேர் வாக்களித்திருந்தனர். இதில் திமுக ஆதரவு வேட்பாளர் ஆனந்தன் போட்டியிட்டார். ஒன்பது சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆனந்தன் 26 ஆயிரத்து 287வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.அதிமுக ஆதரவு வேட்பாளர் கருப்புசாமி 13 ஆயிரத்து 251 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் மொத்தம் 718 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

Views: - 228

0

0