தூத்துக்குடியில் மாமன்னன் படம் பார்க்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுக வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த 29 ஆம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 ஆம் தேதி இரவு 6.30 மணி காட்சியில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நிர்வாகிகளுடன் மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார்.
அப்போது, அமைச்சர் கீதாஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, 10.30 காட்சியிலும் தி.மு.க.வினர் சிலர் படம் பார்க்க முடிவு செய்து உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே டிக்கெட் எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அமைச்சர் கீதா ஜீவன் பெயரை பயன்படுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை இரவு 10.30 மணி காட்சியில் டிக்கெட் ஏதும் எடுக்காமல் பார்த்ததுடன் பட இடைவேளையின் போது பணம் ஏதும் கொடுக்காமல் பாப்கான் கேட்டு திரையரங்க ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது காவல்துறையினரிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையை மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் போலீசாருடனும், திரையரங்க உரிமையாளருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம காணும் வகையில், திரையரங்கில் உள்ள சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மற்ற திமுக நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை பார்க்கச் சென்று தி.மு.க. நிர்வாகிகளே ஓசியில் பாப்கார்ன் கேட்டு திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.