விழுந்தது “தகரம்“ தான், ஆனால் “நகரம்“ வேற : திமுகவின் முகத்திரையை கிழித்த சம்பவம்!!

25 November 2020, 2:28 pm
banner issue - Updatenews360
Quick Share

தமிழகத்துல ஒரு வழியா கொரோனா பத்துன பயம் போனாலும், மறுபக்கம் நிவர் புயலால் அமைதியாக இருந்த மக்களை மீண்டும் சீண்டிப்பாத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு புயல், மழைனு வந்துக்கிட்டேதான் இருக்கு.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை பூந்தமல்லியில் ஒரு பேனர் கீழே விழுந்ததாக வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது.

பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். ஆனால் அந்த வீடியோவில் உள்ள காட்சி சென்னை நகரத்தில் அல்ல பாகிஸ்தானில் உள்ள கரச்சி நகரத்தில் நடந்தது என தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட புயலில், அந்த கோர விபத்து நடந்துள்ளது. அப்போத காற்று வேகமாக வீசியதால் பேனர் சாலையில் வீசப்பட்டு, சாலையில் சென்ற வாகன ஓட்டியை பதம் பார்த்தது.

இந்த வீடியோவை திமுக வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடந்ததாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலி செய்தி பரப்புவதில் திமுக கில்லாடியாக உள்ளது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தக்க பதிலடியும் கொடுத்துள்ளனர்.

Views: - 0

0

0