வாழைத்தார்களுக்கு காவல் இருந்த திமுகவினர் : ஸ்டாலின் வாகனம் புறப்பட்டதும் போட்டா போட்டியில் நிகழ்ந்த காமெடி!!

5 February 2021, 6:56 pm
Dmk Function - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் திமுக நிகழ்ச்சியில் அமைக்கப்பட் வாழைத்தார், கரும்பு தோரணத்திற்கு போட்டி போட்ட மக்கள் வாழைத்தார்களை எடுத்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பிரச்சார மேடைக்கு வரும் பாதையில் வாழை மரங்கள் மற்றும் கரும்புகளினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி முடிந்து புறப்பட்டு சென்ற சில நொடிகளில், கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்த வாழை மரத்தில் இருந்த வாழைத்தாரினை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.

இதில் சிலருக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. சிலர் கத்தி கொண்டு வந்தும், சிலர் கல், தங்கள் கையில் கிடைத்தவற்றை வைத்து வாழைத்தார், வாழைக்காய் மற்றும் கரும்பு ஆகியவற்றை எடுத்து சென்றனர்.

சிலர் வாழைத்தாரினை எடுக்க முடியவில்லை என்பதால் கையினால் வாழைத்தாரை ஊஞ்சல் போன்று ஆடி ஒரு வழியாக எடுத்துச்சென்றனர். குறிப்பாக பெண்கள் வாழைத்தாரினை அதிகளவில் தலையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் சென்றனர்.

காலையில் மிகவும் பார்க்க அழகாக இருந்த வாழை மர தோரோணம், நிகழ்ச்சி முடிந்த சில வினாடிகளில் மக்கள் எடுத்துச் சென்றதால் வெறுமனே காட்சியளித்தது.

Views: - 0

0

0