ஆத்தூர் அருகே திமுக பிரமுகர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் தங்கராஜ் இவர், கடந்த 2010-ம் ஆண்டு சேவுகம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமலோற்பவம் என்பவரிடம் 62 சென்ட் நிலத்தை கிரையம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.
மேலும் படிக்க: என்னை டார்க்கெட் பண்றாங்க… ரூ.200 கோடிய விட ரூ.4 கோடி பெரிசா போச்சா ; நியாயம் கேட்கும் நயினார் நாகேந்திரன்..!!
இந்நிலையில், 2023 டிசம்பரில் சேவுகம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரியலூயிஸ் உறவினர்களான மகன்கள், பெலிக்ஸ் மார்ட்டின், நெல்சன், மகள்கள், அருள் ஜெசிந்தா மேரி, சகாய செல்வி, மருமகள், அந்துவான் கிறிஸ்டி, பேரன் கெவின் மைக்கேல் ஆகிய 6 நபர்களும், திமுக பிரமுகர் தங்கராஜ் வாங்கிய நிலம் தங்களுடைய பூர்வீக நிலம் என கூறி, அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில், போலியாக ஆவணங்களை தயாரித்து, மதுரை அடுத்த உத்தங்குடியில் வசிக்கும் கிறிஸ்டோபர் சாமுவேல் என்பவருக்கு 2023 ஆகஸ்ட் 2-ஆம் தேதி விற்பனை செய்து உள்ளார்.
இந்நிலையில், மறுநாள் 3ஆம் தேதி கிறிஸ்டோபர் சாமுவேல் பெயரில் இருந்த 62 சென்ட் நிலத்தை, மரியலூயிஸ் மகள் சகாயசெல்வி, தனது பெயரில் அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் மாற்றி உள்ளார். இந்த தகவலை அறிந்த திமுக பேரூர் செயலாளர் தங்கராஜ், திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகனை போலீசார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும், நில மோசடி செய்த சகாயசெல்வி, கிறிஸ்டோபர் சாமுவேல், பெலிக்ஸ் மார்ட்டின், நெல்சன், அருள் ஜெசிந்தா மேரி, அந்துவான் கிறிஸ்டி, கெவின் மைக்கேல் மற்றும் பத்திரப்பதிவுக்கு சாட்சிகளாக கையெழுத்திட்ட வழக்கறிஞர் கந்தசாமி, முருகானந்தம், தருண்குமார், பெரியசாமி, ராஜ்பாரத் ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக பிரமுகருக்கு சொந்தமான நிலம் போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.