கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முடக்கி மக்கள் வாயில் மண்ணை போட்டு விட்டது திமுக : சி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 3:55 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் : அதிமுக ஆட்சியில் 1509 கோடி நிதி ஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் விடியா திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 1509 கோடி மதிப்பீட்டில் மரக்காணத்தில் கொண்டுவரப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் அவர்கள் தலைமையில் விழுப்புரத்தில் காந்தி சிலை முன்பு அதிமுக வினர் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் : விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி மக்களுக்கும் , பல்வேறு கிராம மக்களுக்கும் நல்ல குடி நீர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் விழுப்புரம் மாவட்டம் மக்களுக்காக மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக 1509 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட தயாராகின.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை முடக்கி மக்கள் வாயில் மண்னை வாறி போட்டுள்ளது திமுக அரசு. மக்களுக்கு எதிராகவும், ஆள தெரியாத அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டத்தையும் முடக்கி வருகின்றனர்.

இந்த திட்டத்தை கைவிடப்பட்டு 3 மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் தெரியப்படுத்தவில்லை. இந்த திட்டம் கைவிடபட்டதாக கூற அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. மேலும் அரசாணையை மறைத்து மாவட்ட ஆட்சியர்கள் பொய் சொல்கின்றனர் .

வாக்களித்த மக்களுக்கு எதிராக செயல்படும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆட்சியாளர்கள் செயலுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் இல்லையென்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சி.வி சண்முகம் எச்சரிக்கை விடுத்து பேசினார்.

Views: - 406

0

0