திமுக மாடல் ஆட்சியில் இருந்து தேசிய மாடல் ஆட்சிக்கு திமுகவினர் மாறியுள்ளனர் : பாஜக பொதுச் செயலாளர் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 2:17 pm
Madurai BJP - Updatenews360
Quick Share

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது ஆண்டு சுதந்திர தின விழிப்புணர்வு ரத ஊர்வலம் பாண்டி கோவில் ரிஸ்ரோட்டில் துவங்கியது.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது சுதந்திரதின விழிப்புணர்வு ரத
ஊர்வலம் துவங்கியது. விழாவில் தலைமை பாஜக புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பாஜாவினர் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்ட வீரர்கள் ரத ஊர்வலத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் சீனிவாசன், பிரதமர் மோடி அவர்கள் 100 வது ஆண்டு சுதந்திர தினம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் விதமாக அவர்களின் உருவ படங்களை வைத்து இந்த ரத யாத்திரை துவக்கி உள்ளோம்.நேற்றைய தினம் திமுக அமைச்சர்கள் தேசியக்கொடியை வழங்கியது பெரிதும் பாராட்டக்கூடிய ஒன்று.

அவர்கள் திராவிட ஆட்சியில் இருந்து தேசிய மாடல் ஆட்சிக்கு வந்தது வரவேற்கத்தக்கது
நேற்றைய தினம் காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் இறந்த திருமங்கலம் டி புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளோம் என கூறினார்.

Views: - 204

0

0