திமுக மகளிரணி போராட்டத்தில் பெண்கள் “உஷாரா இருங்க“ : டிவிட்டரில் டிரெண்டாகும் #இடுப்புகிள்ளிதிமுக!!

Author: Udayachandran
5 October 2020, 3:16 pm
DMK Women Wings - updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் போராட்டத்தில் உப்பு சப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் கனிமொழி நடத்தும் போராட்டம் என்றால் நிச்சயம் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாலை திமுக மகளிரணி போராட்டம் அறிவித்துள்ளது.

முக்கிய ஆர்ப்பாட்டமாக கருதப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி சார்பாக கனிமொழி பங்கேற்கின்றார். அதே சமயம் ஆர்ப்பாட்டத்தல் மகளிரணியினர் தங்களது இடுப்பை கொஞ்சம் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

என்னடா இது, ஏன் இப்படி சொல்றீங்கனு நினைக்காதீங்க. டிவிட்டர் முழுவதும் டிரெண்டாகி வரும் #இடுப்புகிள்ளி திமுக என்ற ஹேஷ்டேக்தான். இந்த ஹேஷ்டேக் பின் ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை குழுவை அமைக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிரணி அமைப்பாளரிடம் சக திமுகவினர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் கட்சி தலைமைக்கு சென்றது. ஆனால் நடவடிக்கை எடுத்ததோ அந்த பெண் உள்ளிட்ட மூன்று பேர் மீதுதான். 3 பேரை பதவி நீக்கம் செய்ததுதான் மிச்சம்.

Image

புகார் கொடுத்த பெண் நிர்வாகியை பதவியில் இருந்து தூக்கியதால் கரூர் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த
விவகாரத்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள், மகளிரணி தலைமையில் நடக்கும் போராட்டம் என்பதால் மகளிரணிகள் தங்கள் இடுப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மண்ட பத்ரம் டா என்ற வடிவேலு நகைச்சுவை போல ‘இடுப்பு பத்ரம் டா‘ என்று நெட்டிசன்கள் டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர் போன்ற புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Image

Save DMK Women Wing என்று டைப் செய்தும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இடுப்பு கிள்ளி திமுகவிடம் இருந்து Save Our Daughters போன்ற ஹேஷ்டேகுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இன்று மாலை திமுக மகளிரணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் திமுக பெண் நிர்வாகிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 284

0

0