மேகதாது விவகாரத்தில் திமுக கபட நாடகம் : தமிழக பாஜக துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 4:56 pm
Kruppu Muruganantham - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து பாஜக சார்பில் திட்டமிட்டபடி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை மறுநாள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இதில் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் மாநில இணைப் பொருளாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி தமிழக விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. முக்கியமாக விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை பாஜக உடனுக்குடன் தீர்த்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் இதில் நிகழ்வை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் அணை கட்டும் விவகாரத்தில் தற்போதைய தி.மு.க அரசு கபட நாடகம் நடத்தி வருகிறது.  முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதுவதும் கட்டுரை எழுதுவது வாடிக்கையாக செய்து வருகிறார். இதில் அவர் கபட நாடகத்தை தான் நடத்தி வருகிறார்.

Views: - 405

0

0