குளக்கரையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் : தட்டிக்கேட்ட இளைஞருக்கு தர்ம அடி..

24 November 2020, 12:43 pm
Quick Share

கோவை: குளக்கரையை ஆக்கிரமித்து வைத்திருந்த திமுக பிரமுகர் மீது புகார் அளித்த இளைஞரை திமுக.,வினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாசானமுத்து. மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான மீன்கடை சிவா என்பவர் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் சுமார் 24 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், எனவே 75 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை மீட்க வேண்டும் என்றும் அரசுத் துறைக்கு மனு அளித்திருந்தார்.

இதை அறிந்த மீன்கடை சிவா, கூலிப்படை உதவியுடன் மாசானமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன மாசானமுத்து பழனிக்கு தஞ்சம் புகுந்தார். மேலும் நேற்று தனது சொந்த ஊரான கோவைக்கு திரும்பினார். இதனை அறிந்த மீன்கடை சிவா கூலிப்படை ஆட்களை வைத்து மாசானமுத்து மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார்.

படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பித்த மாசானமுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லாததால் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாசானமுத்து, “ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்ததால் என் மீது தாக்குதல் நடத்திய மீன் கடை சிவா மற்றும் அவரது கூலிப்படையினர் மீது மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

Views: - 25

0

0

1 thought on “குளக்கரையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் : தட்டிக்கேட்ட இளைஞருக்கு தர்ம அடி..

Comments are closed.