கலகலப்பு சந்தானமாக மாறிய ஸ்டாலின் : பயன்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை மீண்டும் திறந்து வைத்து சர்ச்சை..!

29 August 2020, 3:16 pm
stalin- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செய்த காரியம் தற்போது அரசியலில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைக்கு இன்னும் 6 மாதத்திற்குள் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் களத்தில் இறங்கி பணியாற்றுவதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

ஆனால், கொரோனாவை வைத்து மட்டும் அரசியல் நடத்தி வருவதை குறிக்கோளாக கொண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சொந்த தொகுதியில் நடக்கும் விஷயங்களே தெரியாமல் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கொளத்தூர் பகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனி பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை அரசுக்கு வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சரும் உடனடியாக உத்தரவை பிறப்பித்து, ஒரு ஏக்கர் அளவில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை, காணொளி காட்சியின் மூலம் திறந்து, மக்களின் பயன்பாட்டிற்கு விட்டார்.

இதை தெரியாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஏற்கனவே முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தினை, முதன்முறையாக திறப்பது போன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். வாழை மரங்கள், தோரணங்கள் என புத்தம் புதிய கட்டிட திறப்பிற்கு கூட செய்திடாத தடபுடலான நிகழ்ச்சியை நடத்தி, மக்களின் பயன்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை ஸ்டாலின் மீண்டும் திறந்து வைத்துள்ளார்.

கலகலப்பு படத்தில் சந்தானம் ஒரேயொரு வேட்டி, சேலையை ஒரு ஊர் மக்களுக்கே கொடுத்த நகைச்சுவை சம்பவம், ஸ்டாலினின் இந்த செயலால் மீண்டும் நியாபகத்திற்கு வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வெறும், ஓட்டுக்காக மட்டுமே மக்களை பயன்படுத்தி வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, சொந்த தொகுதியில் என்ன நடக்கிறது… தொகுதி மக்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை கவனித்தால், அடுத்த தேர்தலில் மீண்டும் எதிர்கட்சி என்ற தகுதியாவது கிடைக்கும் என்கின்றனர் ஆளும் கட்சியினர்..

Views: - 1

0

0