சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் டுவிட்..!

17 August 2020, 11:51 am
Stalin-06-updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோய் தொற்று அதிகம் உள்ள சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 18ம் தேதி முதல் சென்னையில் மாநகராட்சியில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வரும் கடைகளை மட்டும் திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0