‘ஸ்டாலின் ஒரு பச்சோந்தி‘ : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!!

18 September 2020, 4:06 pm
RB Udayakumar - updatenews360
Quick Share

திருவள்ளூர் : மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் ஸ்டாலின் பச்சோந்தி போன்று நிறம் மாறி பேசுகிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு கட்சியினருக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், அரியர் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருவதாகவும், 20லட்சம் மாணவர்களின் காவல் தெய்வமாக தமிழக முதல்வர் திகழ்ந்து வருவதாக புகழாரம் சூட்டினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் விவகாரத்தில் பச்சோந்தி போல் மாறி மாறி பேசி மற்றவர் எழுதிக் கொடுப்பதை அறிக்கையாக அளிக்கிறார் என்று கூறினார். அதிமுகவில் 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்து 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்க பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Views: - 10

0

0