பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை இழந்து விட்டார் ஸ்டாலின் : அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு

11 November 2020, 11:20 am
rb udhayakumar - updatenews360
Quick Share

மதுரை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை இழந்து விட்டதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக சார்பில் “தமிழகம் மீட்போம்” எனும் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட வாரியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது. துரைக்கான கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பாரத் நெட்” குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பாரத் நெட்டில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடைபெற்று வருவதை ஸ்டாலின் குழந்தைத்தன புரிதலுடன் பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எல்லையை தாண்டி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது அவரது இயலாமை காட்டுகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை இழந்துவிட்டார். பாரத் நெட் தமிழகத்திற்கு வந்தால் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்தத் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று உள்ளத்துடன் பல்வேறு களங்கத்தை கற்பிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பாரத் நெட் பணிகள் செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் ஸ்டாலின் குழந்தைத்தனமாக புரிந்துகொண்டு பேசுவதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நிச்சயம் பாரத் நெட் தமிழகத்துக்கு வரும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்,” என தெரிவித்துள்ளார்

Views: - 23

0

0