ஆளுங்கட்சியினருக்கே டஃப் கொடுக்கும் விசிக : வீடு புகுந்து திமுக பிரமுகர் மீது தாக்குதல்.. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 9:16 pm
DMK Vck Clash -Updatenews360
Quick Share

விழுப்புரம் : மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக பிரமுகர் வீட்டை சூறையாடிய விடுதலை சிறுத்தை கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கததை சேர்ந்த திமுக பிரமுகர் மனோகரன். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரான ராஜா என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வெற்றிபெற்ற தினத்திலிருந்து ராஜா தரப்பினர் மனோகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மனோகரன் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜா தரப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மனோகரனின் வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி மனோகரன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவரை கட்டையால் தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

தகவலறிந்த வீட்டிற்கு வந்த மனோகரன் ரத்த காயங்களுடன் கிடந்த மனைவி சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் மனோகரன் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு கோரி மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.திமுக பிரமுகரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுக தொடர்ந்து மக்கள் விரோத சம்பவங்களை கையில் எடுத்து கட்சிப் பெயருக்கும், முதலமைச்சருக்கு களங்கம் விளைவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான விசிகவை சேர்ந்தவர் திமுக பிரமுகரை தாக்கிய சம்பவம் கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 256

0

0