EIAக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு எம்எல்ஏ கடிதம்.!

11 August 2020, 2:14 pm
DMK Mla EIA - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தக்கலையில், இ.ஐ.ஏ 2020 எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கிராம மக்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இ.ஐ.ஏ எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 குறித்து தமிழக மக்களுக்கு கருத்து கூறவேண்டும் என்பதால் அவ்வறிக்கையை தமிழ் மொழியில் வெளியிட கேட்டும் கருத்து கூற கால அவகாசம் கேட்டும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தபால் நிலைய வளாகத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர் அமைப்புகள் கிராம மக்கள் இணைந்து பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு கோரிக்கை குறித்து தபால் அட்டை அனுப்பப்பட்டது.