ஜாதிப்பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ : “அந்த தண்ணி என் தண்ணி இல்ல“ என ஜகா வாங்கிய சம்பவம்!!

23 November 2020, 1:22 pm
Krishnaigiri DMK MLa - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ கட்டப்பஞ்சாயத்து செய்யும் போது ஒரு தரப்பினரை ஜாதி பெயர் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்கட்டுவன் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு மட்டுமல்லாமல் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டுவது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஜாதிப் பெயரை சொல்லி திட்டுவது மட்டுமல்லாமல், தான் சொல்வதை கேட்கவில்லையென்றால் தூக்கில் ஏற்றிவிடுவேன் என்றும் எம்எல்ஏ கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த காட்சி கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில் இருதரப்புக்கு இடையேயான நிலபேரம் தொடர்பாக கட்டபஞ்சாயத்து நடந்தது போல உள்ளது. அதில் ஒரு தரப்பினரை இப்படி திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி எம்எல்ஏவாக உள்ள செங்குட்டுவன் தொடர்ந்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுவது திமுகவினருக்கு விருப்பம் இல்லையெனவும்., இந்த கட்டபஞ்சாயத்து நடைபெற்ற போது திமுகவினரே இந்த வீடியோவை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இது குறித்து எம்எல்ஏ செங்குட்டுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஒருவருக்கு பத்தரை லட்சம் ரூபாய் முன்பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டது தொடர்பான பிரச்சனை தம்மிடம் வந்ததாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்படும் நிலத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ கட்டபஞ்சாயத்து விவகாரத்தை திமுகவினரே வீடியோ பதிவு செய்து ஊர் முழுக்க பரவிவிட்ட சம்பவம் அதிர்ச்சியையும், திமுகவின் உட்கட்சி பிரச்சனையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Views: - 0

0

0